திருகோணமலையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்!
Trincomalee
Fish
By Kiyas Shafe
திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சல்லி கடற்கரையில் டொல்பின் மீனொன்று இன்று (06.01.2026) காலை இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
கரையொதுங்கிய டொல்பின்
இந்த டொல்பின் மீனானது சுமார் 5 அடி நீளம் கொண்ட சிறிய டொல்பின் என தெரியவருகிறது.
மேலும் மற்றுமொரு டொல்பின் அதே இடத்தில் உயிருடன் கரையொதுங்கி பின்னர் கடற்றொழிலாளர்களால் கடலுக்குள் அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த இடத்திற்கு சேருநுவர வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்து இறந்த நிலையில் காணப்பட்ட டொல்பின் மீனை மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.