அரிசி லொறியில் கொண்டுவரப்பட்ட நாய்கள் : அதிரடியாக கைது செய்யபட்ட சாரதி

Sri Lanka Police Colombo Sri Lankan Peoples Public Health Inspector
By Rakshana MA Jan 05, 2025 11:35 AM GMT
Rakshana MA

Rakshana MA

பலாங்கொடை(Balangoda) நகரில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக அரிசியுடன் சேர்த்து இரண்டு நாய்களும் கொண்டு வரப்பட்ட நிலையில் பலாங்கொடை பொது பாதுகாப்பு பரிசோதகர்கள் பாரவூர்தியை கைப்பற்றியதுடன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

பலாங்கொடை நகரின் பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கடையொன்றிற்கு அருகில் பாரவூர்தியை நிறுத்தி அரிசி மூட்டைகளை இறக்க முற்பட்ட போது, ​​பாரவூர்தியில் அரிசி மூடைகளுக்கு இடையில் இரண்டு நாய்கள் இருப்பதை கண்ட நபர் ஒருவர் அதனை தனது கைத்தொலைபேசியில் காணொளி எடுத்து பொது பாதுகாப்பு பரிசோதகர்களுக்கு அனுப்பியுள்ளார்.

இதன்படி பாரவூர்தியை கைப்பற்றிய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள அமெரிக்கா!

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள அமெரிக்கா!

கையிருப்பு அரிசி 

இந்த பாரவூர்தியில் இருபத்தி ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்கப்படும் கச்சா அரிசி கையிருப்பு இருந்ததாகவும், இந்த பாரவூர்தி திஸ்ஸமஹாராமவில் உள்ள அரிசி ஆலைக்கு சொந்தமானது எனவும் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரிசி லொறியில் கொண்டுவரப்பட்ட நாய்கள் : அதிரடியாக கைது செய்யபட்ட சாரதி | Dogs Brought In Rice Truck Driver Arrested

சீனி உற்பத்தியில் கவனம் செலுத்தும் அரசாங்கம் : தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர்

சீனி உற்பத்தியில் கவனம் செலுத்தும் அரசாங்கம் : தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர்

நடுக்கடலில் கைப்பற்றப்பட்ட 11 கிலோ தங்கம்! கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்பு

நடுக்கடலில் கைப்பற்றப்பட்ட 11 கிலோ தங்கம்! கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW