அமெரிக்காவில் நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை!

United States of America
By Fathima May 05, 2023 11:04 PM GMT
Fathima

Fathima

அமெரிக்க மருத்துவ குழுவினரால் கருவில் இருந்த சிசுவின் மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சாதனை படைத்துள்ளனர்.

வயிற்றில் கரு உருவாகி 34 வாரங்கள் ஆன நிலையில் வைத்தியர்களினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூளையில் இருந்து இதயத்துக்கு இரத்தத்தை எடுத்து செல்லும் இரத்த நாளம் சிசுவிற்கு சரியாக வளர்ச்சி அடையாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

இது வீனஸ் ஆப் கேலன் என்ற குறைபாடாகும். இந்த குறைபாட்டினால் இரத்த ஓட்டத்தை மெதுவாக்கும். இரத்தம் நுண் குழாய்களுடன் நேரடியாக இணைவதற்கு பதிலாக நேரடியாக நரம்புகளுடன் இணையும்.

இதன் காரணமாக நரம்புகளுக்குள் அதிக இரத்த அழுத்தத்தை உருவாக்கும். நரம்புகளில் இந்த கூடுதல் இரத்த அழுத்தம் ஏற்படும் போது பல பிரச்சினைகள் உருவாகும் என தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவில் நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை! | Doctors Brain Surgery Unborn Baby Rare Disorder

மேலும் இதயம் செயல் இழப்பு மற்றும் மூளை பாதிப்பு ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயமும்  ஏற்படும். 

மிகவும் அரிய வகை நோயான இந்த குறைபாட்டை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய டேரன் ஆர்பாக் தலைமையிலான மருத்துவ குழுவினர்  மிகவும் சவாலான இந்த மூளை அறுவை சிகிச்சையினை  ஒரு ஊசி மூலம் வெற்றிகரமாக செய்துள்ளனர்.

மேலும், உலகில் முதல் முறையாக இந்த அறுவை சிகிச்சையினை அமெரிக்க மருத்துவ குழுவினர் செய்து சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.