டிஸ்பிரின் - அஸ்பிரின் உட்கொள்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka Hospitals in Sri Lanka
By Fathima Jun 12, 2023 07:27 AM GMT
Fathima

Fathima

இலங்கையில் டிஸ்பிரின் அல்லது அஸ்பிரின் உட்கொள்பவர்களுக்கு கடுமையான அவதானத்துடன் இருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பவர்கள் கட்டாயம் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

அத்துடன் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் அவர்கள் பாடசாலைக்கோ அல்லது வேலைக்கோ செல்லாமல் சில நாட்கள் வீட்டில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும்.

மருத்துவ உதவி பெறல்

டிஸ்பிரின் - அஸ்பிரின் உட்கொள்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Disaspirin A Warning For Those Taking Aspirin

காய்ச்சலை கட்டுப்படுத்த பரசிட்டமோல் மருந்தை உட்கொண்டாலும்  டிஸ்பிரின், அஸ்பிரின் அல்லது இது போன்ற மருந்துகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் டிஸ்பிரின் அல்லது அஸ்பிரின் போன்ற மருந்துகளை உட்கொண்டால் அது கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

இரண்டாவது நாளில் காய்ச்சல் கட்டுக்குள் வரவில்லை என்றால் மருத்துவ உதவியை நாட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.