மக்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ள பொலிஸார்: தேசபந்து தென்னகோன்

Sri Lanka Police Deshabandu Tennakoon
By Mayuri Jul 15, 2024 10:50 AM GMT
Mayuri

Mayuri

சமூகத்தில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் செயல்களை செய்யும் கும்பல்களை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் மிகச் சிறந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கடந்த 3, 4 மாதங்களில் 800 க்கும் மேற்பட்ட பாதாள உலக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும், கடந்த இரண்டரை மாதங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை எனவும், அண்மைய சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் செயற்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

மக்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ள பொலிஸார்: தேசபந்து தென்னகோன் | Dhesabandhu Thennakon Statement

பாதாள உலகக் குழுக்கள்

மேலும், நான்கில் மூன்று பாதாள உலகக் குழுக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய சிலர் தொடர்பில் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள குற்றவாளிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர், இது தொடர்பில் பொதுமக்கள் ஒருபோதும் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW