கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Colombo Ministry of Health Sri Lanka Dengue Prevalence in Sri Lanka Hospitals in Sri Lanka National Health Service
By Fathima Jun 10, 2023 08:56 PM GMT
Fathima

Fathima

கொழும்பு மாவட்டத்தில் நுளம்பு பெருக்கம் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

கொழும்பு மாநகர சபை - கொதடுவை பிரதேசங்களில் நுளம்புகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Dengue Warning To Colombo

விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இதனால் ஜூன் மாத இறுதிக்குள் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவில் தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி எதிர்காலத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வாய்ப்புகள் உள்ளதாக எச்சரித்துள்ளார்.