டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்! சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை
சுகாதாரத்துறையின் புள்ளிவிபரங்களின் பிரகாரம், நடப்பு ஆண்டில் இலங்கையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயரக்கூடும் என்று முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சிகிச்சை
கடந்த 2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 4931 டெங்கு நோயாளிகள் பதிவாகியிருந்தனர்.

எனினும் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தின் முதல் ஆறு நாட்களில் மாத்திரம் 1598 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு நாட்களுக்கு மேற்பட்ட காய்ச்சல், தசைநார்களில் வேதனை, மூட்டுக்களில் கடுமையான வலி, கண்களின் கீழ்ப்பகுதியில் வலி, அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவர் ஒருவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களை சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.