மட்டக்களப்பில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை..!

Batticaloa Sri Lanka Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka Eastern Province
By Rakshana MA Dec 12, 2024 05:13 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு நோய் கட்டுப்பாட்டு பரிசோதனைகள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், அதிகளவு டெங்கு நோய் பரவக்கூடிய இடங்களாக வீடுகள், அரச மற்றும் அரச சாரா திணைக்களங்கள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மாற்றம் : கன மழைக்கான சாத்தியம்

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மாற்றம் : கன மழைக்கான சாத்தியம்

டெங்கு பரவும் அபாயம்

எனவே இந்த அபாயகரமான சூழ்நிலையில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அத்துடன் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை போதிய கவனத்தை செலுத்தி, டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய சூழல் அற்ற இடமாக வைத்திருங்கள்.

மட்டக்களப்பில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை..! | Dengue Prevalence In Sri Lanka 2024

இதற்கிடையில், எலி காய்ச்சல் அபாயம் இருப்பதனால் விவசாயிகளும் வயல் நிலங்களை அண்டி வசிப்பவர்களும் மிகுந்த அவதானத்துடன் இருப்பதுடன், காய்ச்சல் ஏற்படுமிடத்து அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு சென்று உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்.

அது மட்டுமல்லாது, இது பண்டிகை காலம் என்பதனால் பொது போக்குவரத்தில், பிரயாணத்தில் ஈடுபடும் பயணிகள் உணவு உண்பதற்காக நிறுத்தப்படும் உணவு சாலைகளில் தமக்கு தரமான உணவு விநியோகிக்கப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதுடன், ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் எமக்கு அறிவிக்குமிடத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்

நாட்டில் மருந்து தட்டுப்பாட்டிற்கு தீர்வு: நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டு

நாட்டில் மருந்து தட்டுப்பாட்டிற்கு தீர்வு: நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டு

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW