இலங்கையில் உயர் ஆபத்துமிக்க காலகட்டம்! அடுத்த 3 வாரங்களில் தீவிரமடையவுள்ள நிலைமை
இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரை உள்ள காலம் உயர் ஆபத்துமிக்க கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டில் டெங்கு பரவும் அபாயம் அடுத்த 3 வாரங்களுக்கு தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், டெங்கு பரவல் தற்போது ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
பல மாவட்டங்களில் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மூன்று மாவட்டங்கள் தொடர்ந்து கவலைக்குரியவையாக உள்ளது. அவற்றுக்குக் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.
நிலவும் மழைக்காலச் சூழல் காரணமாக புதிய நுளம்பு குடம்பிகள் உருவாகும் என்பதால், பொது மற்றும் தனியார் இடங்களைத் தொடர்ச்சியாகத் தூய்மையாக வைத்திருப்பது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.