நாட்டில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம் - 2 மாதங்களில் 7 பேர் பலி

Colombo Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka National Health Service
By Fathima Mar 17, 2024 04:30 AM GMT
Fathima

Fathima

நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது

கடந்த 15 நாள்களில் மாத்திரம் 2 ஆயிரத்து 132 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

டெங்கு நோய் குறித்து மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிக டெங்கு நோயாளர்கள்

மேலும் டெங்கு அதி அபாய வலயங்களாக 10 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம் - 2 மாதங்களில் 7 பேர் பலி | Dengue Fever Claimed 7 Death In 2 Months

இவற்றில், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களில் காலப்பகுதியில் 18 ஆயிரத்து 556 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.