பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டஇளைஞனை விடுதலை செய்யக் கோரி கந்தளாயில் போராட்டம்
கந்தளாயில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞனை விடுதலை செய்யக் கோரியும், பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்குதல் நடத்துவதை கண்டித்தும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது சமூக செயற்பாட்டாளர் இப்ராஹீம் முபாரி தலைமையில் நேற்று (31) கந்தளாய் பேராறு மார்கன் சந்தியில் நடைபெற்றுள்ளது.
இதன்போது , "பயங்கரவாத சட்டத்தின் ஊடாக அப்பாவி மக்களை தண்டிக்காதே", "அரசே இளைஞனை விடுதலை செய்" போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
கோரிக்கை
பொலிஸாரின் கண்காணிப்பில் அமைதியாக நடைபெற்ற இந்த போராட்டத்தில், அரசாங்கம் உடனடியாக இந்த விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தின் மூலம், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் மூலம் அப்பாவி மக்கள் தண்டிக்கப்படுவதை நிறுத்தி இளைஞனை அரசாங்கம் விரைந்து விடுதலை செய்யவேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |