கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு

Ampara Sri Lankan Peoples Hospitals in Sri Lanka Eastern Province Women
By Rakshana MA Dec 10, 2024 06:23 AM GMT
Rakshana MA

Rakshana MA

சாய்ந்தமருதிலுள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

இந்த நிகழ்வு இன்று(10) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கண்டி மனிதாபிமான அமைப்பின் அனுசரனையுடன் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதனின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

வடக்கு- கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

வடக்கு- கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

பிரசவப் பொதிகள்

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசமான சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்திலுள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கே பிரசவத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைகக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு | Delivery Packages For Womens

மேலும், கண்டி மனிதாபிமான அமைப்பின் அனுசரனையுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 25 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான பிரசவ பொதிகள் (Maternity kits அடங்கிய பொதிகள்) கையளித்து வைக்கப்பட்டதுடன் அவர்களுக்கு தேவையான ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக், கண்டி மனிதாபிமான அமைப்பின் பிரதிநிதிகளான ராஷிதா, எம்.என்.எம்.நௌஷாத், பொதுச் சுகாதார தாதிய சகோதரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மேற்பார்வை பொது சுகாதார மருத்துவ மாது ,பொதுச் சுகாதார தாதியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.  

மட்டக்களப்பு பாடசாலை மட்ட அபாய குறைப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறை

மட்டக்களப்பு பாடசாலை மட்ட அபாய குறைப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறை

மோசமடையும் காற்றின் தரநிலை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மோசமடையும் காற்றின் தரநிலை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

       நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGallery