வெனிசுலாவின் இடைகால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்பு

Donald Trump United States of America Venezuela
By Fathima Jan 06, 2026 09:21 AM GMT
Fathima

Fathima

வெனிசுலாவின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வி எழுந்தநிலையில், அந்நாட்டின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை இடைகால ஜனாதிபதியாக நியமித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், டெல்சி ரோட்ரிக்ஸ், வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதியாக அந்நாட்டின் நாடாளுமன்றக் கட்டிடத்தில் பதவியேற்றார்.

ரோட்ரிக்ஸுக்கு அவரது சகோதரரும், தேசிய சட்டமன்றத் தலைவருமான ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவிப் பிரமாணம் 

உறுதி மொழி ஏற்பதற்கு முன், எங்கள் தாயகத்திற்கு எதிரான சட்டவிரோத இராணுவ ஆக்கிரமிப்பால் வெனிசுலா மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட துன்பங்களுக்கு நான் வருத்தத்துடன் வருகிறேன் என்று அவர் தனது வலது கையை உயர்த்தி கூறினார்.

வெனிசுலாவின் இடைகால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்பு | Delcy Rodriguez Sworn Interim President Venezuela

டெல்சி ரோட்ரிக்ஸ் 2018 ஜூன் முதல் வெனிசுலாவின் துணை அதிபராக பணியாற்றி உள்ளார்.

அவர் நிதி மற்றும் எண்ணெய் மந்திரியாகவும் உள்ளார். துணை ஜனாதிபதி பொறுப்புகளை தாண்டி 2 முக்கிய துறையின் மந்திரியாக இருக்கும் காரணத்தால் வெனிசுலா அரசில் மிக சக்திவாய்ந்த நபராக உள்ளார்.

1969 மே 18 அன்று வெனிசுலா காரகாஸில் பிறந்த டெல்சி ரோட்ரிக்ஸ், ஜார்ஜ் அன்டோனியோ ரோட்ரிக்ஸ் என்ற இடதுசாரி கெரில்லா பிரிவு தலைவரின் மகளாவார் என்பது குறிப்பிடத்தக்கது.