கடவுச்சீட்டு தொடர்பில் திரன் அலஸ் வெளியிட்டுள்ள தகவல்

Tiran Alles Passport Dollars
By Mayuri Sep 12, 2024 04:22 AM GMT
Mayuri

Mayuri

கடந்த இருபத்தைந்து வருடங்களாக 11 மில்லியன் கடவுச்சீட்டுகள் ஒரே நிறுவனத்தினால் 5.89 டொலர்களுக்கு எவ்வித டெண்டரும் இன்றி அச்சிடப்பட்டுள்ளதாகவும், அதற்கும் குறைவான விலைக்கு பெற்றுக்கொள்ள முடியும் என்பதாலேயே இம்முறை டெண்டர் கோரப்பட்டதாகவும் அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

5.06 டொலர்களுக்கு இ-கடவுச்சீட்டு பெற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு நேற்று (11) சென்ற அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.

கடவுச்சீட்டு, விசா விவகாரம்

மேலும் கூறுகையில், கடவுச்சீட்டு, விசா விவகாரம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசியல் ஆதாயம் அடைய காரணமாக அமைந்தது. சஜித் பிரேமதாச, தான் ஆட்சிக்கு வந்ததும் அதில் தொடர்புடையவர்களை தண்டிப்பேன் என்கிறார். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவதை நாங்களும் விரும்புகிறோம்.

கடவுச்சீட்டு தொடர்பில் திரன் அலஸ் வெளியிட்டுள்ள தகவல் | Delay In Passport And Visa Issue

ஆனால் உண்மை தெரியாமல் பேசுகிறார். கடவுச்சீட்டு பெறுவதற்கு தரகர் மாஃபியா 50,000 ரூபாய் முதல் பல்வேறு தொகைகளை வசூலித்ததாக அறிந்தோம். ஆனால் தற்போது அவை அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடிவரவு அலுவலகம் அருகிலும் ஒரு சிறப்பு பொலிஸார் குழு பணியில் உள்ளது.

இப்போது வரிசைகள் இல்லை. இருபத்து இரண்டு வருடங்களாக ஒரே நிறுவனத்தால் பாஸ்போர்ட் அச்சிடப்பட்டது. குறைந்தபட்சம் டெண்டர் கூட கோரப்படவில்லை.

தட்டுப்பாடு

அவர்கள் இதுவரை 11 மில்லியன் பாஸ்போர்ட்டுகளை அச்சிட்டுள்ளனர். இம்முறை அதே நபர்களிடம் கொடுக்கச் சென்றபோது அதை நிறுத்திவிட்டு டெண்டர் கோரச் சொன்னேன். புதிய கடவுச்சீட்டு கிடைக்கும் வரை சில தட்டுப்பாடு உள்ளது.

கடவுச்சீட்டு தொடர்பில் திரன் அலஸ் வெளியிட்டுள்ள தகவல் | Delay In Passport And Visa Issue

கிடைப்பதை நிர்வகித்தல் வேண்டும். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வெளிநாடு செல்வதற்கு எனக்கு விசா பெற வேண்டிய அவசியம் இல்லை.

உலகின் எந்த நாட்டிலும் 10 ஆண்டுகள் வாழ எனக்கு சிறப்பு விசா உள்ளது. ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் தொடர்புடைய 80 அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கான விசாவைப் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் தவறான கூற்று என்று நான் நினைக்கிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW