கொழும்பில் இருந்து வந்தவர் யாழ்ப்பாணத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

By Aanadhi Apr 30, 2024 01:12 PM GMT

யாழ்ப்பாணத்தில்(Jaffna) நண்பனின் வீட்டில் திடீரென மயங்கி விழுந்த நபரெருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து யாழ்பாணத்திற்கு வந்த நபர் ஒருவரே இன்றையதினம் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள நண்பனின் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கொழும்பு - கொட்டஹேன பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தோபர் சுரேந்திரன் வில்சன் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனை

உயிரிழந்த நபரின் நண்பர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும், குறித்த வீட்டில் வேலை செய்வதற்காக உயிரிழந்த நபரும் அவரது நண்பரும் வருகை தந்திருந்தாகவும் கூறப்படுகின்றது.

இதன்போது குறித்த நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.