இறக்காமத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது

Ampara Sri Lanka Sri Lankan Peoples Drugs
By Rakshana MA Apr 16, 2025 06:25 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை (Ampara) இறக்காமம் பிரதேசத்தில் 810 கிராம் ஜஸ்போதைப் பொருளுடன் வியாபாரி ஒருவரை நேற்று (15) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினருடன் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து குறித்த போதை பொருள் வியாபாரியின் வீட்டை சம்பவதினமான நேற்று சுற்றிவளைத்து முற்றுகையிட்டு சோதனையிட்டுள்ளனர்.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை

நீண்டகாலமாக வியாபாரம்

இதன்போது வியாபாரத்துக்காக கொண்டுவந்த 810 கிராம் ஜஸ் போதை பொருளை மீட்டதுடன் 32 வயதுடைய வியாபாரியை கைது செய்துள்ளனர்.

இறக்காமத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது | Dealer Was Arrested With Drugs At Irakkamam

இதில் கைது செய்யப்பட்டவர் நீண்டகாலமாக போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழுவின் சிறப்பு அறிவிப்பு

தேர்தல் ஆணைக்குழுவின் சிறப்பு அறிவிப்பு

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் : 7 பேர் உயிரிழப்பு

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் : 7 பேர் உயிரிழப்பு

           நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW