வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளத்தில் சைபர் தாக்குதல்!

Sri Lanka Cyber Attack Department of Meteorology Crime
By Laksi Nov 12, 2024 09:12 AM GMT
Laksi

Laksi

வளிமண்டலவியல் திணைக்களத்தின் (Department of Meteorology) உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் (Cyber ​​attack ) நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இணையத்தளத்திற்கான அணுகல் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல்: மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி வெளியிட்ட அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல்: மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி வெளியிட்ட அறிவிப்பு

மீளமைக்கும் பணிகள்

அத்துடன், அதனை கூடிய விரைவில் மீளமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளத்தில் சைபர் தாக்குதல்! | Cyber Attack On Website Department Of Meteorology

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 2000 இணைய அச்சுறுத்தல் மற்றும் இணையவழி குற்றச் செயல்கள் தொடர்பில் முறைபாடு பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT)தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தல்: பாதுகாப்பு கடமைகளில் பொலிஸ் அதிகாரிகள்

பொதுத் தேர்தல்: பாதுகாப்பு கடமைகளில் பொலிஸ் அதிகாரிகள்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW