சுற்றறிக்கைக்கு மாறாக இ.மி.ச ஊழியர்களுக்கு கோடிக்கணக்கில் கொடுப்பனவு!

CEB Sri Lanka
By Nafeel May 01, 2023 03:17 PM GMT
Nafeel

Nafeel

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் 367 கோடி ரூபா அமைச்சரவை தீர்மானம் மற்றும் நிர்வாக சேவை சுற்றறிக்கைக்கு மாறாக கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளமை கணக்காய்வு அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2020ஆம் ஆண்டு ஊழியர் கொடுப்பனவாக 154 கோடி ரூபாவும், 2021ஆம் ஆண்டு ஊழியர் கொடுப்பனவாக 213 கோடி ரூபாவும் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சரவை மற்றும் பணிப்பாளர் சபையின் தீர்மானங்களுக்கு மாறாக மின்சார சபையின் 323 ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் அவர்களது சம்பளத்தில் 65 வீதத்தை தாண்டியுள்ளதாகவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.