அரசாங்கத்திற்கு மரிக்கார் விடுத்த பகிரங்க எச்சரிக்கை!

Sajith Premadasa Samagi Jana Balawegaya Saidulla Marikkar Opposition parties
By Fathima Dec 01, 2025 03:00 PM GMT
Fathima

Fathima

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் வழக்கொன்று தாக்கல் செய்யப்போவதாக எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்தார்.

அரசாங்கம் பொறுக்கூற வேண்டும்

மேலும் பேசிய அவர்,''அனர்த்தத்தில் மரணமடைந்த ஒவ்வொருவருக்கும் அரசாங்கம் பொறுக்கூற வேண்டும்.மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

அரசாங்கத்திற்கு மரிக்கார் விடுத்த பகிரங்க எச்சரிக்கை! | Criminal Case Against The Npp Government

புயல் ஏற்படப்போவதாக முன்கூட்டிய அறிவித்திருந்த நிலையில் முன்னாயத்த நடவடிக்கை எடுக்காததற்கும் வழக்கு தாக்கல் செய்வோம்.

இன்று நாடாளுமன்றத்தில் அவர்கள் விட்ட பிழைகள் நாட்டுக்கு தெரியவரும் என்பதால் எமக்கு அனர்த்தம் தொடர்பான விவாதம் நடத்த சந்தர்ப்பம் கொடுக்கவில்லை.

பிழைகள் 

அனர்த்தங்கள் ஏற்பட்டபோதும் அவர்களால் அதை கட்டுப்பாட்டிக்குள் கொண்டு வரமுடியாமல் போய்விட்டது.

அரசாங்கத்திற்கு மரிக்கார் விடுத்த பகிரங்க எச்சரிக்கை! | Criminal Case Against The Npp Government

களனி ஆற்றில் இருந்து நீர் நிலத்திற்கு வரும் முன்னர் கால்வாய்களின் நீரை திறந்து விடுமாறு கோரினோம் அதையும் அரசாங்கம் செய்யவில்லை.

ஒரு உணவு பார்சலுக்கு 200 ரூபாவையே இன்று வழங்கி வருகிறது.இதை அதிகரிக்குமாறும் கோட்டோம்.அரசாங்கம் இதுவரை ஒன்றும் செய்யவில்லை.''என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.