வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தொடர்பான வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
சட்டவிரோதமாக செல்வம் சேர்த்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் குற்றம் சுமத்தப்பட்ட வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனை குருநாகல் நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது தொடர்பில் இன்று (06) இடம்பெற்ற வழக்கு விசாரணையில் சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களும் ஆதாரமற்றவை என நீதிமன்றம் தீர்ப்பளித்து விடுதலை செய்துள்ளது.
சுமத்தப்பட்ட குற்றம்
சட்டவிரோதமாக செல்வம் சேர்த்தல், பெண்களுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்தமை மற்றும் தீவிரவாத செயல்களில் தொடர்பு போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தன.
எனினும், குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய எந்த ஆதாரமும் இல்லை என்பதால் நீதிமன்றம் வழக்கை நிராகரித்துள்ளது.
கடந்த 2019 மே 25 அன்று, வைத்தியர் ஷாபி கைது பொலிஸாரால் மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவரது கைது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிறகு இடம்பெற்றுள்ளதுடன் முதலில் குற்றச்சாட்டுக்களாக, அதிகமான செல்வத்தை சந்தேகத்திற்கிடமாக சேர்த்ததாகவும், சிங்கள பெண்களை சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
மேலும் இதில் 4000 பெண்கள் பாதிக்கப்பட்டகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், ஷாபி மீது விசாரணை நடத்துவதற்காக குற்றவியல் விசாரணை துறை நியமிக்கப்பட்டிருந்தது. ஆனால், விசாரணையின் போது எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்பின்னணி
இதற்கமைய அவரது வழக்கு நீண்ட காலம் நீடித்தது. இதன்படி தற்போது நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளது.
மேலும், அவருக்கு வெளிநாடு செல்லும் தடையும் நீதிமன்றம் நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |