பசிலை கைது செய்ய சர்வதேச சிவப்பு பிடியாணையை பெற நீதிமன்றம் உத்தர

Basil Rajapaksa
By Pavi Oct 14, 2026 06:11 AM GMT

சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (14) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், சர்வதேச பொலிஸின் ஊடாக சிவப்பு அறிவிப்பைப் (Red Notice) பெற்றுக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

2014ஆம் ஆண்டு சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட 7.8 மில்லியன் ரூபாவை, பணியகத்தின் ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தாமல், ஊவா மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு 12,000 ரி-ஷேர்ட்டுகளை வழங்குவதற்குப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பசிலை கைது செய்ய சர்வதேச சிவப்பு பிடியாணையை பெற நீதிமன்றம் உத்தர | Court Orders Red Notice For Basil

இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.