சம்பா அரிசியை 30 ரூபாய் அதிக விலையில் விற்றவருக்கு 500.000 ரூபாய் அபராதம்!

Law and Order Rice
By Vinoja May 20, 2026 04:06 PM GMT

இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசியை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையைவிடவும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தமைக்காக முல்லேரியா கடைக்காரர் ஒருவருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் 500,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சம்பா அரிசியை 30 ரூபாய் அதிக விலையில் விற்றவருக்கு 500.000 ரூபாய் அபராதம்! | Court Has Fined A Popular Supermarket

கொழும்பு மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையின் போதே குறித்த கடையில் ஒரு கிலோ கிராம் அரிசி நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 30 ரூபாய் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் கடை உரிமையாளர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது