பாணுக்கு கட்டுப்பாட்டு விலை! அமைச்சரின் அறிவிப்பு

Sri Lanka Economy of Sri Lanka Nalin Fernando
By Mayuri Jul 23, 2024 03:39 AM GMT

பேக்கரி உரிமையாளர்கள் பாணின் விலையை குறைக்கத் தவறினால், பாணுக்கு கட்டுப்பாட்டு விலை அறிமுகம் செய்யப்படும் என வர்த்தக விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு நாட்களில் பேக்கரி உரிமையாளர்கள் பாணின் விலையை குறைக்காவிட்டால் கட்டுப்பாட்டு விலை அறிமுகம் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

விலைகளை குறைக்குமாறு கோரிக்கை

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பேக்கரி உற்பத்தியாளர்களை சந்தித்து பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

பாணுக்கு கட்டுப்பாட்டு விலை! அமைச்சரின் அறிவிப்பு | Control Prices Will Be Intraduceed For Bread

அத்துடன், இரண்டு அல்லது மூன்று நாட்களில் விலை குறைப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படாவிட்டால் அரசாங்கம் தீர்வு ஒன்றை எடுக்க நேரிடும் என பேக்கரி உற்பத்தியாளர்களிடம் கூறியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW