டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு: மத்திய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்

Donald Trump United States of America Gun Shooting
By Raghav Jul 14, 2024 10:32 PM GMT
Raghav

Raghav

அமெரிக்க (united states of america)  முன்னால் அதிபர் டொனால்ட் ட்ரம் (Donald Trump) மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமானது படுகொலை முயற்சி என்று மத்திய புலனாய்வு அமைப்பு அல்லது எப்.பி.ஐ (Federal Bureau of Investigation) தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்திய சந்தேக நபர் தோமஸ் மேத்யூ என்ற 20 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக எப்.பி.ஐ. (FBI) நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

அமெரிக்க - பென்சில்வேனியா மாநிலத்தில் நடைபெற்ற டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) தேர்தல் பிரசாரத்தின் போது நேற்று (14) துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

குடியரசுக் கட்சி

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த  டொனால்ட் ட்ரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு: மத்திய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் | Condemnation Of Assassination Attempt On Trump

இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden), முன்னாள் அதிபர் பராக் ஒபாமா (Barack Obama) உள்ளிட்ட  உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW