ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

Election Commission of Sri Lanka Election
By Mayuri Aug 07, 2024 05:19 AM GMT

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில் 121 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலேயே குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்துள்ள முறைப்பாடுகள்

இதற்கமைய தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு இதுவரை 80 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு | Complaints Related To The Presidential Election

அத்துடன் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு இதுவரையில் 41 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW