ஜனாதிபதி தேர்தல்! ஆயிரத்தை நெருங்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை

Election Commission of Sri Lanka Election
By Mayuri Aug 22, 2024 02:23 AM GMT

24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 51 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.08.20 ஆம் திகதி வரையிலும் கிடைக்கப் பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 717 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு முறைப்பாடுகள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

Gallery