பணவீக்கம் தொடர்பில் வெளியான தகவல்
Colombo
Sri Lanka
Economy of Sri Lanka
By Laksi
கொழும்பு பணவீக்கம் பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நுகர்வோர் விலைச்சுட்டெண்ணில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கமே இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, 2024 ஜூலை மாதத்தில் 2.4% ஆக இருந்து 2024 ஆகஸ்ட் மாதத்தில் 0.5% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
பணவீக்கம் வீழ்ச்சி
இதில், வருடாந்திர புள்ளி அடிப்படையில், உணவுப் பணவீக்கம் ஜூலை 2024 இல் 1.5% ஆக இருந்து ஆகஸ்ட் 2024 இல் 0.8% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
உணவு அல்லாத பணவீக்கம், முந்தைய மாதத்தில் 2.8% ஆக இருந்த நிலையில் 2024 ஆகஸ்ட் மாதத்தில் 0.4% ஆகக் கணிசமாக குறைந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |