வாராந்த ஏலத்தில் அதிகரித்துள்ள தேங்காயின் விலை
இலங்கையில் தேங்காய் விலை 18.32 வீதம் பதிவாகியுள்ள நிலையில் தற்போது வாராந்த ஏலத்தில், தேங்காய் ஒன்றின் விலையானது அதிகூடிய விலையைப் பதிவு செய்துள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தேங்காய்களின் பற்றாக்குறை காரணமாகக் கடந்த ஒரு மாதமாக வாராந்த ஏலம் நடைபெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேங்காய் ஒன்றின் விலை
மேலும், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த ஏலத்தில் 109,615 ரூபாவாக இருந்த 1000 தேங்காய்களுக்கான விலை கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற ஏலத்தில் 129,699 ரூபாவாக இருந்ததாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சிறப்பங்காடிகள் தேங்காய் ஒன்று 174 ரூபாய் முதல் 190 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறதுடன் கடந்த ஜனவரி 2ஆம் திகதி பெரிய தேங்காய்களின் மொத்த விலை 155 முதல் 175 ரூபாவாகவும், சிறிய தேங்காய்களின் விலை 125 முதல் 145 ரூபாவாகவும் இருந்ததாகச் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |