தேங்காய் எண்ணெய் தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

Sri Lanka
By Mayuri Oct 06, 2024 08:31 AM GMT

தேங்காய் எண்ணெய் பாவனை தொடர்பில் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் புத்திக டி சில்வா முன்னதாக முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாமல், இரசாயனங்களைப் பயன்படுத்தி செயற்கையாகச் சுத்திகரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட 80,000 மில்லியன் கிலோகிராம் நிறையுடைய எண்ணெய், சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் புத்திக டி சில்வா குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

தேங்காய் எண்ணெய் தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு | Coconut Oil Price Today In Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW