பாதாள உலக குழுக்களால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்
மஹரகம (Maharagama) - பமுன்வ தொடருந்து நிலைய வீதியில் உள்ள மதுஷின் மனைவியின் வீட்டுக்கு அருகில் “மதுஷ் சென்ற இடத்திற்கு பாதாள உலகில் உள்ள அனைவரும் செல்ல தயாராகுங்கள்” என ஒட்டப்பட்டிருந்த பதாகையினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த பதாகையில் KPI என்ற மூன்று ஆங்கில எழுத்துகள் எழுதப்பட்டிருந்ததாக பாதுகாப்பு பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும், தெமட்டகொட (Dematagoda) காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவாயிலிலும் தெமட்டகொட தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அறிவிப்பு பலகையிலும் ஒரே மாதிரியாக எழுதப்பட்ட இரண்டு அச்சுறுத்தல் குறிப்புகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊடகப் பேச்சாளர்
இது தொடர்பில் கருத்து தெரிவித்த காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ, அச்சுறுத்தும் வகையிலான பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தியவர்கள் தொடர்பில் மஹரகம மற்றும் தெமட்டகொட காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கிளப் வசந்தவின் இறுதிக் கிரியைகள் நேற்று (13) மாலை இடம்பெற்ற நிலையில் அந்த இடத்தில் மாகந்துரே மதுஷ் என்ற பாதாள உலகத் தலைவரின் கல்லறையில் பதாகை ஒன்றும் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |