வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Sri Lanka Climate Change Weather
By Rakshana MA May 29, 2025 03:17 AM GMT

நாட்டில் தற்போது நிலவும் அசாதரணமான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள மழை நிலைமைகள் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின் படி, இன்று (29) மாலை முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடன் கூடிய வானிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு

வானிலை மாற்றம்

அதேவேளை, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு | Climate Change Sri Lanka

இந்த நிலையில் மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.  

தம்பலகாமத்தில் இளைஞர் யுவதிகளுக்கான மாபெரும் தொழிற் சந்தை

தம்பலகாமத்தில் இளைஞர் யுவதிகளுக்கான மாபெரும் தொழிற் சந்தை

பலத்த காற்று

நாட்டின் பிற பகுதிகளில் மணிக்கு 30 - 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு | Climate Change Sri Lanka

அத்தோடு, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக கடுமையான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை எச்சரித்துள்ளது.

ஹஜ்ஜூக்கு விமானத்தில் செல்லவிருந்த இளைஞருக்கு காத்திருந்த அதிசயம்

ஹஜ்ஜூக்கு விமானத்தில் செல்லவிருந்த இளைஞருக்கு காத்திருந்த அதிசயம்

நாட்டில் அதிகரிக்கும் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பாவனை..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் அதிகரிக்கும் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பாவனை..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW