காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! திருகோணமலை கடற்கரையில் சிவப்பு எச்சரிக்கை

Sri Lanka Climate Change Weather
By Fathima Jan 06, 2026 08:07 AM GMT
Fathima

Fathima

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் கடல் சீற்றமடைந்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

திருகோணமலை டச்பே கடற்கரையில் கடல் அலையின் சீற்றம் அதிகரித்திருப்பதனால் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் சிவப்பு எச்சரிக்கைக் கொடி பறக்கவிட்டப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் அதிகமாக குளிக்கும் இடத்தில் கடல் அதிகபடியாக உள்வாங்கியிருப்பதனை அவதானிக்க முடிகிறது.

அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகள் மற்றும் சுற்றுலாப் படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதனையும் அவதானிக்க முடிந்ததாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


Gallery