தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் : புது வருடத்துடன் நடைமுறைக்கு
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம் எதிர்வரும் 1ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தலைமையில் இந்த வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுத்தமான இலங்கை
இந்த நிலையில், "சுத்தமான இலங்கை" திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்று அண்மையில் நிறுவப்பட்டிருந்தது.
இதன்படி இந்த செயலணியில் ஜனாதிபதியின் செயலாளர் வைத்திர் என்.எஸ்.குமாநாயக்க, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைத் தளபதிகள் உட்பட 18 உறுப்பினர்கள் காணப்படுகின்றனர்.
மேலும், இந்த ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள், "சுத்தமான இலங்கை" திட்டத்தை திட்டமிடல், வழிகாட்டுதல், நடைமுறைப்படுத்துதல், முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்தல் என்பனவாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |