இறக்காமம் சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் மரணம்
இறக்காமம் சிவில் பாதுகாப்பு படையைச்சேர்ந்த நிலாம் என்பவர் தேர்தல் கடமைக்காக பொத்துவில் வந்த நிலையில் மாரடைப்பின் காரணமாக மரணமடைந்துள்ளார்.
இந்த ஜனாஸாவுக்கான மரணவிசாரணையை நடாத்துமாறு பொலிஸ் பொறுப்பதிகாரியின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிணங்க வைத்தியசாலை சென்று ஜனாஸாவை விடுவிக்கு முகமாக திடீர் மரண விசாரணை அதிகாரியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான S.A.அஹமட் முனாசுடீன் ஜனாஸாவை பார்வையிட்டு உறவினர்களிடம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளார்.
மாரடைப்பு காரணமாக மரணம்
அதன் பின்னர் இந்த ஜனாஸாவை பிரேத பரிசோதனையின்றி உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளார். அதேவேளை பொலிஸார் உறவினர்களிடம் வாக்குமூலத்தை பெற்ற பின்னர் ஜனாஸாவை ஒப்படைத்துள்ளனர்.
குறித்த ஜனாஸா பொத்துவில் ஜனாஸா வாகனத்தின் மூலம் இறக்காமத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



