வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபம்

Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Apr 25, 2023 09:11 PM GMT
Fathima

Fathima

தொழிலுக்காக வெளிநாடு செல்லும் பெண்களினதும் அவர்களின் பிள்ளைகளினதும் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு புதிய சுற்றுநிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இந்த சுற்றுநிருபத்தை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, இரண்டு வயதிற்கு குறைவான பிள்ளைகளை உடைய தாய்மாருக்கு வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபம் | Circular Issued Regarding Vauinatu Employment

மேலும் வௌிநாடு செல்லும் 45 வயதிற்குட்பட்ட பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதிய சுற்றுநிருபத்திற்கமைய, 18 வயதிற்கு குறைவான திருமணமாகாத பிள்ளைகளை உடைய தாய்மார், தமது பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான மாற்று வேலைத்திட்டமொன்றை, தமது பிரதேச செயலாளர் அலுவலகத்தில் முன்வைக்க வேண்டும் எனவும் சுற்றுநிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.