புதிய ஜனாதிபதி அநுரவுக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து
இலங்கை சோசலிச குடியரசின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவிற்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சீன ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, சீன அரசாங்கத்தின் சார்பிலும் மக்களின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.
இலங்கையும் சீனாவும் பாரம்பரிய நட்பு அயல்நாடுகள். இருநாடுகளும் இராஜதந்திர உறவை ஏற்படுத்தி 67 வருடங்களாகின்ற நிலையில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வையும், ஆதரவையும் வழங்கி வருகின்றன.
அரசியல் பரஸ்பர நம்பிக்கை
இதன்மூலம் இருநாடுகளும் நட்புறவுமிக்க சகவாழ்வு வேவ்வேறு அளவிலான நாடுகளிடையிலான பரஸ்பரம் நன்மையளிக்க கூடிய ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கான சிறந்த உதாரணங்களாகும்.
சீன-இலங்கை உறவுகளின் வளர்ச்சிக்கு நான் அதிக முக்கியத்துவம் அளித்து, எங்களது பாரம்பரிய நட்பை கூட்டாக முன்னெடுத்துச் செல்லவும், அரசியல் பரஸ்பர நம்பிக்கையை பலப்படுத்தவும், உயர்தர பட்டுப்பாதை திட்டத்தில் அதிக பலன்களை அடையவும் உங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன் என சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |