சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் குறித்து வெளியான அறிவிப்பு
Sri Lanka
China
By Fathima
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி நாளை (11) ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரவுள்ளார் என்பதை இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாளைமறுதினம் திங்கட்கிழமை சீன வெளிவிவகார அமைச்சர் தன்னைச் சந்தித்து பேச்சு நடத்துவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி எதிர்வரும் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையே இலங்கை வருவார் என முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது
.
இந்நிலையிலேயே சரியான திகதி விவரத்தை வெளிவிவகார அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரையும் சீன வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளார்.