வடக்கை வெற்றி பெற்ற அனுரவுக்கு சீன தூதரின் மகிழ்ச்சி பகிர்வு
வடக்கை வென்ற, முதல் தெற்கைச் சேர்ந்த தலைவர் அநுரகுமார திசாநாயக்க என இலங்கைக்கான சீன தூதர் கீ சென்ஹொங் பருத்தித்துறை - சக்கோட்டை முனையில் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர், பருத்தித்துறை - சக்கோட்டை முனைக்கு நேற்று (19) விஜயம் செய்துள்ளனர்.
இதன்போது, வடக்கு கிழக்கில் சீன அரசாங்கத்தின் சார்பில் தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகச் சீன தூதுவர் தெரிவித்தார்.
சீனாவிடமிருந்து இலங்கைக்கான நிவாரணங்கள்
இலங்கை வரலாற்றில் தெற்கைச் சேர்ந்த தலைவர் ஒருவர் வடக்கை வெற்றி பெற்றிருப்பது முக்கியமான நிகழ்வாகும். இலங்கை அரசு என்று அடிப்படையில் சீன அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் வேறுபாடு இல்லை. யாராக இருந்தாலும் அரசு என்ற முறையில் சீனாவின் ஆதரவு தொடரும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறியளவிலான கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்குக் கடற்றொழில் உபகரணங்கள் மற்றும் மீனவ குடும்பங்களுக்கான உலருணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள் என்பன பல கட்டங்களாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், வட கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குப் பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குவது மகிழ்ச்சி என்றும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என வேறுபாடுகளைக் கடந்து எல்லோரும் இலங்கையர்களாக வாழ்வதற்குச் சீனா ஒத்துழைப்புகளை வழங்கும் என்றும் சீன தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |