கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி! ஏற்பட்டுள்ள சிக்கல்
கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜெயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மாற்றம்
அத்துடன், கால்நடை தீவனமாக மக்காச்சோளத்தை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகளில் கடந்த வாரம் மாற்றம் பதிவாகியது.
இதற்கமைய, உள்நாட்டு சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் சில்லறை விலைகள் கணிசமான அளவு குறைவடைந்தது. இதன்படி முட்டையொன்றின் விலை 26 முதல் 30 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி 650 ரூபாய் முதல் 850 ரூபாய் வரையிலான விலைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |