கோழி இறைச்சியின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Food Shortages Sri Lanka Economy of Sri Lanka Egg
By Laksi Sep 27, 2024 10:13 AM GMT
Laksi

Laksi

நாட்டில் கோழி இறைச்சியின் விலை அடுத்த இரு வாரங்களுக்குள் குறைவடைய வாய்ப்பு உள்ளதாக  அகில இலங்கை சிறு கைத்தொழில் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைவடைந்துள்ள காரணத்தினால் விலையில் மாற்றம் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, அடுத்த இரண்டு வாரங்களில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை நூறு ரூபா தொடக்கம் நூற்றைம்பது ரூபா வரை குறையலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

கோழி இறைச்சியின் விலை

தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை 1,000 முதல் 1,100 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.

கோழி இறைச்சியின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் | Chicken Meat Price Reduced

இந்த நிலையில், அடுத்த பதினைந்து நாட்களில் இந்த விலை 900 முதல் 850 ரூபாய் வரை குறையலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முட்டையின், விலையும் எதிர்வரும் பண்டிகை நாட்களில் 20 ரூபா வரையிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW