பிரித்தானியாவில் இலவசமாக கற்க வாய்ப்பு: வெளியான நற்செய்தி
பிரித்தானியாவின் செவனிங் புலமைப்பரிசில் (Chevening Scholarship) திட்டத்திற்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளதாக இலங்கையர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, குறித்த புலமைப்பரிசில் திட்டத்தில் ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்புமாறு உயர் ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையை வெளியிட்டு நினைவூட்டியுள்ளது.
முழு நிதியுதவி
இந்த நிலையில், புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
செவனிங் புலமைப்பரிசில் திட்டமானது, எந்தவொரு பிரித்தானிய பல்கலைக்கழகத்திலும் எந்தவொரு முதுகலைப் படிப்பையும் மேற்கொள்ள முழு நிதியுதவி பெற்ற உதவித்தொகைகளை வழங்குகிறது.
மேலும், விண்ணப்பங்கள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு, http://chevening.org/apply என்ற இணையத்தளத்தை பார்வையிடவும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |