ரணிலின் கைதால் ஏற்படப்போகும் பாரதூரமான விளைவுகள் : சந்திரிக்கா கடும் எச்சரிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(ranil wickremesinghe) கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க(chandrika kumaratunga) தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ரணிலின் கைதுக்கான விளைவுகள்
ரணிலின் கைதுக்கான விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் குழுவின் தலைவிதியையும் விட சமூகத்தின் உரிமைகளுக்கு ஒரு பிரச்சினையை ஏற்படுத்துவதாகவும், அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை கடுமையாக எதிர்ப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிறைத்தண்டனை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நடத்திய சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் தலதா அதுகோரல, சந்திரிக்காவின் இந்த அறிக்கையை வெளியிட்டார்.