சந்திரிக்காவின் கோரிக்கையை மறுத்த அநுர!
அரசாங்க வீட்டிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை வெளியேறுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உதவ எவரும் முன்வரவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் அவர் வசிக்கும் அரசாங்க வீட்டிலிருந்து வெளியேற 2 மாத கால அவகாசம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் தனக்கு பொருத்தமான வீட்டினை கண்டுபிடிக்க கால அவகாசம் தேவைப்படுவதாக சந்திரிக்கா கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்ட விதிமுறைகளுக்கமைய, ஒரு அரச வீட்டில் வசிக்கும் எவரும் அந்த இடத்தை விட்டு வெளியேற முன் 3 மாத அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெளியேற இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகாது.
புதுப்பித்தல் பணிகள் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே முடிந்தால் அது இன்னும் குறைவாக இருக்கும். மூன்று வாரங்களுக்கு முன்பு கீழே விழுந்த பிறகு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலிருந்து தான் மீண்டு வந்துள்ளேன்.
மாடியிலிருந்து கூட கீழே செல்ல முடியாது. இது ஒரு தீவிர அறுவை சிகிச்சை. எனக்கு ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை பிசியோதெரபி உள்ளது. எனவே, தற்போது அந்த புதிய வீட்டில் நான் நகரவோ அல்லது எந்த வேலையும் செய்யவோ முடியாது என்றும் கூறியுள்ளார்.
தற்போது சில புதுப்பித்தல் பணிகள் செய்ய வேண்டிய ஒரு சிறிய வீட்டைக் கண்டுபிடித்துள்ளேன். என் மகன் வந்து ஒரு வாரம் எனக்கு உதவுவதாக கூறினார்.
புதிய சட்டம் இயற்றப்படும் வரை, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வாடகையை செலுத்தி தனது வாழ்நாள் முழுவதும் தற்போதைய இடத்தில் வாழ அனுமதி கேட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது என கூறியுள்ளாார்.