இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி விலகல்
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் செனேஷ் திசாநாயக்க பண்டார(Senesh Dissanayaka Bandara) பதவி விலகியுள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதியாக அநுர குமாரதிசாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவானதன் பின்னர், கடந்த செப்டம்பர் 25ஆம் திகதி அப்போதைய ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தினால் , ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தலைவராக செனேஷ் பண்டார நியமிக்கப்பட்டிருந்தார்.
பதவி விலகல்
இந்த நிலையில், ராஜபக்சர் குடும்பத்தினர் உகண்டாவில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்த கூற்றை நாடகக் கலைஞர் ஒருவர் கிண்டலடித்த சம்பவம் தொடர்பில் இரண்டொரு நாட்களுக்கு முன்னர் ரூபவாஹினி செய்திகளில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
இதனையடுத்து, செனேஷ் திசாநாயக்க பண்டாரவுக்கு பதவி விலகுமாறு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில், பதவி விலகியுள்ள செனேஷ் பண்டார, ஶ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையின் சிரேஷ்ட பேராசிரியராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |