11 நிதி நிறுவனங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிப் பரிவர்த்தனைகள் அறிக்கைச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்கத் தவறியதற்காக, இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு 11 நிதி நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கும் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இடையில் நிகழ்ந்த மீறல்களைக் கருத்தில் கொண்டு இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அபராதம் விதிப்பு
பணமோசடியைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் ஆகியவற்றுக்கான ஒழுங்குமுறை அமைப்பாக, இலங்கையின் நிதிப் புலனாய்வுப் பிரிவு, 11 நிறுவனங்களுக்கு ரூ. 14.6 மில்லியன் அபராதம் விதித்துள்ளது.

இதற்கிடையில், நிர்வாக அபராதங்களாக வசூலிக்கப்பட்ட அனைத்துத் தொகைகளும் ஒருங்கிணைந்த நிதியில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.