சீமெந்து மீதான வரி குறைப்பு! வெளியான தகவல்
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் சீமெந்து மீதான செஸ் வரியைக் (Cess levy) குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின் வரி ஒரு கிலோகிராமிற்கு 1 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வரிக்குறைப்பு
இந்த வரிக்குறைப்பு செப்டெம்பர் மாதம் 06ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, ஒரு கிலோகிராம் செயற்கை நிறம் அல்லது சாயம் பூசப்படாத வெள்ளை சீமெந்திற்கு 5 ரூபாவாக இருந்த செஸ் வரி 4 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
50 கிலோகிராம் மற்றும் அதற்கும் குறைவான பொதிகளில் இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கான செஸ் வரி 8 ரூபாவில் இருந்து 7 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |