QR குறியீடு இல்லாது பெட்ரோல் விநியோகம்

By Dharu Apr 11, 2026 07:16 AM GMT

பண்டிகைக் காலம் காரணமாக, இன்று (11.04.2026) முதல் வரும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரையான எரிபொருள் விநியோகம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி எரிபொருள் வழங்குவதற்கான 'QR' முறை நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளப்படாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இது குறித்து இன்று (11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதன் தலைவர் டி.ஜி. ராஜகருண,

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஒற்றை மற்றும் இரட்டை எண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். என ராஜகருண தெரிவித்துள்ளார்.