முபாறக் குழுமத்தினால் ஆண்களுக்கான பிரத்தியோக காட்சியறை சாய்ந்தமருதில் திறந்து வைப்பு

Sri Lanka Businessman Kalmunai
By Nafeel May 04, 2023 04:06 PM GMT
Nafeel

Nafeel

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் கிளை நிறுவனங்களை கொண்டு இயங்கும் முபாரக் குழுமத்தின் மற்றுமொரு நிறுவனமான முபாறக் இமேஜ் நிறுவனம் சாய்ந்தமருது பிரதான வீதியில் முபாறக் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் எம்.எஸ். முபாறக் தலைமையில் இன்று (14) மாலை திறந்து வைக்கப்பட்டது.

ஆண்களுக்கு மட்டுமேயான காட்சியறையாக இருக்கும் இந்த முபாறக் இமேஜ் நிறுவனத்தை முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவுனரும், முபாறக் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் எம்.எஸ். முபாறக் அவர்களின் தந்தையுமான அல் ஹாஜ் எம். மீராசாஹிப் அவர்கள் நாடாவை வெட்டி குறித்த நிறுவனத்தை திறந்து வைத்தார்.

உலக நாடுகளில் இருந்து ஆடையணிகளை புதிது புதிதாய் நேரடியாகவும், பிரத்தியேகமாகவும் தருவித்துக் தருவதில் முன்னணியில் திகழ்வதோடு, வருடம் முழுவதுமே வேறெங்கும் கிடைக்காத விஷேட விலைகளில் அனைத்தையும் வழங்கும் முபாறக் டெக்ஸ்டைல்ஸ் கிழக்கின் மாபெரும் ஜவுளி சமுத்திரமாகும். இந்த முபாறக் குழும நிறுவனங்களில் திருமண பட்டுச்சாறிகள், கூறைச்சாறிகள், வெல்வெட் லெஹங்கா , காக்ரா சோளீ , நீண்ட திருமண ஆடைகள், முழுமையாக அலங்காரம் செய்யப்பட்ட சாறி, தாய்லாந்து பாதணிகள் , திருமண ஆடைகள் உட்பட மணப் பெண்களுக்குத் தேவையான ஆடையணி வகைகளுடன் , திருமண கோட், சூட், குர்தா போன்றவற்றை தரமானதாக நியாய விலையில் கொள்வனவு செய்யலாம் .

தேர்ந்தெடுக்கப்பட்ட துணிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆடையணி வகைகள் நேர்த்தியான முறையில் தயாரிக்கப்பட்ட ஆடையணிவகைகள், ஆடவர் மகளிர், சிறுவர் சிறுமியருக்கான அனைத்துவித ஆடையணிவகைகளும் முபாறக் டெக்ஸ்டைல்ஸில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது .

முபாறக் இமேஜ் நிறுவன திறப்பு விழாவில் முபாறக் குழும நிர்வாக பணிப்பாளர்கள், வர்த்தக பிரமுகர்கள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள், முபாறக் நிறுவனங்களின் உத்தியோகத்தத்தார்கள், ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.