நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்
பேருந்துக் கட்டணங்களில் இன்று (23) நள்ளிரவு முதல் 12.19% உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.
அதன்படி, ரூ. 27 ஆக இருந்த குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் ரூ. 30 ஆகவும், ரூ. 2,159 ஆக இருந்த இறுதிக்கட்டணம் ரூ. 263 உயர்த்தப்பட்டு ரூ. 2,422 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட பேருந்துக் கட்டணத்தை மட்டுமே பயணிகளிடமிருந்து வசூலிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக பேருந்துக் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட பேருந்துக் கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கப்பட்டால், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற தொலைபேசி எண்ணுக்கோ அல்லது 0712595555 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கோ முறைப்பாடு அளிக்குமாறு பொதுமக்களை போக்குவரத்து ஆணைக்குழு கேட்டுக்கொள்கிறது.