விடுமுறை நாட்களிலும் பேருந்து பருவச் சீட்டை பயன்படுத்த அனுமதிக்குமாறு பணிப்புரை

By Mayuri Oct 12, 2024 09:37 AM GMT

சனி, ஞாயிறு மற்றும் ஏனைய அனைத்து விடுமுறை நாட்களிலும் பாடசாலை மாணவர்கள், தொழிநுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மாதாந்த பருவச் சீட்டைப் பயன்படுத்தி பேருந்துகளில் தடையின்றி பயணிக்க அனுமதிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து சபைத் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பல முறைப்பாடுகள்

விடுமுறை நாட்களில் மாணவர்கள் மேற்கொள்கின்ற போக்குவரத்தின் போது பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

விடுமுறை நாட்களிலும் பேருந்து பருவச் சீட்டை பயன்படுத்த அனுமதிக்குமாறு பணிப்புரை | Bus Pass In Sri Lanka

இதனை கருத்தில் கொண்டு, அதற்கான ஒரு தீர்வாக குறித்த மாதத்திற்கான பருவச் சீட்டைப் பயன்படுத்தி அம்மாதம் முழுவதும் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்துகளில் பயணிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு போக்குவரத்து சபையின் தலைவருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW